19.01.1989இல் வவுனியா சமளங்குளத்தில் மரணித்த தோழர்கள் பெரிசு (நவரத்தினம் – கல்நாட்டினகுளம்), ராஜன் (சீனி – வவுனியா) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 19 January 2025
Posted in செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். நாளை இடம்பெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Read more
Posted by plotenewseditor on 19 January 2025
Posted in செய்திகள்
சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். இலங்கையின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலில் சிறந்து விளங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by plotenewseditor on 19 January 2025
Posted in செய்திகள்
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாய் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 19 January 2025
Posted in செய்திகள்
சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட பாரவூர்தி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவில் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்
Posted by plotenewseditor on 19 January 2025
Posted in செய்திகள்
கந்தர – தலல்ல பகுதியில் இன்று காலை இடம் பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மூன்று சிறார்கள் உட்பட 61 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.