வடமாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றிலில் ஒன்று கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தை முன்னெடுத்தனர். Read more
யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தொடருந்து திணைக்களத்தினால் இணையதளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தொடருந்து திணைக்களம் அளித்த முறைபாட்டை தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சேருநுவர – கல்லாறு இராணுவ முகாமை அண்மித்து இன்று(20) அதிகாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் விபத்துக்குள்ளான போது பயணிகள் 49 பேர் இருந்துள்ளனர்.
சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.