இராணுவ முகாமொன்றில் காணாமல் போயிருந்த T56 ரக 73 துப்பாக்கிகளில் 38 துப்பாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மேலதிக சோதனைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர். காணாமல் போனதாகக் கூறப்படும் ஏனைய துப்பாக்கிகளைத் தேடும் பொருட்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். Read more
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம், கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இதன்போது உடன்பாடு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது. அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இராமநாதன் அர்ச்சுனா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடந்த வாரம் சென்னைக்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு, கனடாவில் இருந்து இயங்கும் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் கலந்துரையாடுவதற்காக சென்றமை தான் காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என் மீது போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன. இது தொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்டது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமட்டா அக்கியோ திருகோணமலை -மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதிக்கு நேற்று (20) விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட சம்பூர் – பெரிய குளத்தை அவர் இதன்போது பார்வையிட்டார்.