குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். Read more
கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஜயன் கோயிலடி, ஊரியான் பெரியகுளம், கண்டாவளை ஆகிய பகுதிகளில் அறுவடை நடைபெற்று எஞ்சி இருந்த நெற்கதிர்கள் வெள்ளத்தாள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு இணையவழி முறை மூலம் ஒரு திகதியை முன்பதிவு செய்து, குறித்த திகதியில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (23) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஒருவர் வசிக்கும் பகுதியிலிருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் நோய்களைப் பரிசோதிக்க ஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஆரம்ப சுகாதார மேம்பாட்டுக்கான முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு இரண்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, http://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும். செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் ஆவரங்கால் பகுதியில் நேற்று (22.01.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த உதயநாதன் விதுசன் (வயது 32) சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற குறித்த இளைஞன் மீது மோதியே விபத்து இடம்பெற்றது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.