24.01.2024இல் திருகோணமலையில் மரணித்த தோழர் லதன் (முத்தையா யோகராசன் – திருகோணமலை) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுகள்…
Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
24.01.2024இல் திருகோணமலையில் மரணித்த தோழர் லதன் (முத்தையா யோகராசன் – திருகோணமலை) அவர்களின் ஓராம் ஆண்டு நினைவுகள்…
Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் மணியம் (மாசிலாமணி சின்னையா – பொன்னம்பலம்) அவர்கள் (Founder – Auto Plus Nirmala) 20.01.2025 திங்கட்கிழமை மொன்றியலில் காலமானார்.Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” 2023ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” என்ற பெயர் மாற்றப்பட்டு, “திருவள்ளுவர் கலாசார மையம்” என அண்மையில் பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கட்டடத்தில், ” யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம்” என இன்று(24) பெயர் பலகை பொருத்தப்பட்டிருந்தது.
Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துவதற்கான சட்டத்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சு தெரிவிக்கின்றது. 2016 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபை சட்டத்தின் கலப்பு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கூறினார். Read more
Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 4 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பபட்டுது. விதிகளுக்குப் புறம்பாக மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவ்வாறான விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் கோரியுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
மன்னார் காற்றாலை திட்டம் இரத்து செய்யப்படவில்லை என அதானி குழுமம் அறிவித்துள்ளது. மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் அதானி நிறுவனம் செயற்படுத்த முன்மொழியப்பட்ட 484 மெகாவோட் காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தையும் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இந்தத் தகவல்கள் பொய்யானவை என அதானி குழுமத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
நீக்கப்பட்ட தமது பாதுகாப்பு பிரிவினரை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவொன்று பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ தமது சட்டத்தரணிகள் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் தெரிவித்தார். இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன் போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும் அதற்கு உதவி வழங்க அவர் உடன்பாடு தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 24 January 2025
Posted in செய்திகள்
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த மனு, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற ஆயம் முன்னிலையில் விசாரிக்கப்படுகிறது. Read more