யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 4 அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பபட்டுது. விதிகளுக்குப் புறம்பாக மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவ்வாறான விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் போராடுதல், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் தொடர்பிலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என போராட்டத்தை முன்னெடுத்துள்ள மாணவர்கள் கோரியுள்ளனர்.

அதுதவிர மாணவர்களின் கற்றலுக்கான சுதந்திரத்தை உறுதி செய்து – மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.