Header image alt text

2017.01.26இல் மரணித்த தோழர் பாபு (ராமசாமி காளிமுத்து – தம்பனைச்சோலை) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…

துயர் பகிர்கிறோம்!

Posted by plotenewseditor on 26 January 2025
Posted in செய்திகள் 

மட்டக்களப்பு உன்னிச்சையை சேர்ந்த தோழர் சுமன் (புவனேஸ்வரன்) அவர்களின் புதல்வன் நேற்று அகால மரணமடைந்துள்ளார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருவதோடு, அன்னாரின் புரிவுத் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்கு கொள்கிறோம்

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கு இடையே நாளைய தினம் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. ஏலவே இந்த சந்திப்பு நேற்றைய தினம் நடைபெறவிருந்த நிலையில் அது நாளைய தினம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது. Read more

காலி-அகுரெஸ்ஸ பிரதான வீதியின் அங்குலுகஹ சந்தியில் 3 பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்துள்ளனர். நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றுடன் ஏனைய இரண்டு பஸ்கள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் இமதுவ மற்றும் கராபிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். எவரும் ஆபத்தான நிலையில் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மூன்று பஸ்களினதும் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா – சாந்திபுர பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘Eagle’s View Point’ இன்று(26) திறந்துவைக்கப்பட்டது. வௌிவிவகார, வௌிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இலங்கையின் உயரமான இடத்தில் அமைந்துள்ள கிராமமாக கருதப்படும் நுவரெலியா – சாந்திபுர கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 6,182 அடி உயரத்தில் அமைந்துள்ளது. Read more