Header image alt text

யாழ்.நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் , வவுனியா திருநாவற்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் , கிளிநொச்சி 86/3 திருவையாற்றை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தர்மலிங்கம் சுந்தரலிங்கம் (முன்னாள் ஆசிரியர் – கிளி/வட்டக்கச்சி ம.வி, கிளி/வன்னேரிக்குளம் ம.வி) (உரிமையாளர் – ஶ்ரீ லிங்கா பொத்தகசாலை – கிளிநொச்சி , மல்லாவி, விசுவமடு , மாங்குளம் ஶ்ரீ லிங்கா அரிசி ஆலை – திருவையாறு) அவர்கள் 2025-01 -27 திங்கட்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம்.

Read more

28.01.2016இல் மரணித்த மட்டக்களப்பு உன்னிச்சை இருநூறுவில்லை பிறப்பிடமாகவும், புதூரை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் வெள்ளையன் (நாகமணி சிவராசா – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் – வவுணதீவு) அவர்களின் 09ம் ஆண்டு நினைவுநாள் இன்று…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் பேச்சாளர் கி.டனிசன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்திற்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின் போது கேத்தரின் வெஸ்ட் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்றதுடன், சிவில் சமூக தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரையும் அவர் இதன்போது சந்தித்துள்ளார்.

உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. Read more

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டு இரத்த குழாய் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று(28) முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற யாழ்.பல்கலைக்கழக பேரவைக்கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதி, பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தமது பதவியை இராஜினாமா செய்தார். Read more

ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட்(Catherine West), பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார சமநிலை உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமை திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. Read more

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் 90 நாட்களுக்குள் உரிய கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று(27) பிற்பகல் இந்த வர்த்தமானியை வௌியிட்டிருந்தார். Read more