உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்னர் சபாநாயகருக்கு கிடைக்குமாயின் அது தொடர்பில் விவாதிக்கும் வகையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. Read more
பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்திற்குரிய பலாத்காரத்தை பிரயோகித்தமை மற்றும் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக மூவரடங்கிய புதிய நீதிபதிகள் ஆயம் ஒன்றைப் பெயரிடுமாறு பிரதம நீதியரசரிடம் பரிந்துரைக்குமாறு, சட்டமா அதிபர் முன்வைத்த கோரிக்கை, கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தினால் நிராகரிக்கப்பட்டது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து,பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் எனப் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
அந்தாட்டிக்காவின் மிக உயரமான மலையான வின்சன் மலையை ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றுள்ளார். 4,892 மீற்றர் உயரம் கொண்ட குறித்த மலையில் ஏறி அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதேவேளை, 2018ஆம் ஆண்டில், உலகின் மிக உயரமான மலைத் தொடரான எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையை ஜோஹன் பீரிஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.