யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குத் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.