வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும்இ அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார். Read more
கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த நியமனங்களை வழங்கியுள்ளார். கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளராக ஜே.எம். ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அபிவிருத்திக்காக அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டின் எந்தப் பகுதியிலும் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்க முடியும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்தக் காணிகளுக்குப் பதிலாக கட்டாயமாக மாற்றுக் காணிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கடவுச் சீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்டச் செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வட மாகாண தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.