Header image alt text

திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து மீண்டும் பாவனைக்கு எடுப்பதற்காக புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட தரப்பினர் குறித்த எண்ணெய் தாங்கிகளை அண்மையில் பார்வையிட்டதாக வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 500 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 24 தாங்கிகளின் முழுமையான உரிமை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு உரித்தானதாகும். Read more

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் இன்று(15) இடம்பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று(14) சீனாவை சென்றடைந்தார். இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினக் கற்களை உள்ளாடைகளில் மறைத்து வைத்துச் சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற சீனாவைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

14.01.2000இல் மரணித்த தோழர் செல்லக்கிளி மாஸ்டர் (வடிவேல் விஐயரட்ணம் – பருத்தித்துறை) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

14.01.1988இல் மரணித்த தோழர்கள் ரங்கன் (பெரியகல்லாறு), ஜோன்சன் (யாழ்ப்பாணம்), சேரலாதன் (குஞ்சுக்குளம்), வேலு (வில்வராஜா – குழவிசுட்டான்), சேகர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான கான்ஸ்டபிள்கள் கடந்த 31ஆம் திகதி வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து 5,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 340 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவிற்குப் பயணமாகியுள்ள நிலையில் 5 அமைச்சுகளுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களான டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு என்பவற்றுக்குப் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

மாகாண மட்டத்தில் குற்ற விசாரணை பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக இந்த பிரிவுகளை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தற்போது தென் மாகாணத்தில் இத்தகைய பிரிவு செயற்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்தார். Read more

கம்பளை, தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடத்தப்பட்ட மாணவியுடன் அம்பாறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரின் பாதுகாப்பிலிருக்கும் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ள நிலையில், அவரை வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். Read more