கந்தளாயைப் பிறப்பிடமாகவும், 24/27A, சகாயமாதாவீதி, அன்புவழிபுரம், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் வக்கீல் (ஜெகமோகன்) அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. சின்னத்தம்பி சித்திரவேல் அவர்கள் இன்று (12.01.2025) காலமானார்.Posted by plotenewseditor on 12 January 2025
Posted in செய்திகள்
கந்தளாயைப் பிறப்பிடமாகவும், 24/27A, சகாயமாதாவீதி, அன்புவழிபுரம், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் வக்கீல் (ஜெகமோகன்) அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. சின்னத்தம்பி சித்திரவேல் அவர்கள் இன்று (12.01.2025) காலமானார்.Posted by plotenewseditor on 12 January 2025
Posted in செய்திகள்
இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்த வீட்டுத்திட்டங்களில் சுமார் 4000 வீடுகள் அமைந்துள்ளன. Read more
Posted by plotenewseditor on 12 January 2025
Posted in செய்திகள்
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று(12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. அதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பீ அபேகோன் மற்றும் M.S.K.B.விஜேரத்ன ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 11 January 2025
Posted in செய்திகள்
11.01.1987இல் யாழ்ப்பாணத்தில் மரணித்த கழகத்தின் தளப் பொறுப்பாளர் தோழர் மென்டிஸ் (அரியராஜசிங்கம் விஐயபாலன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று… கழகத்தின் சிறந்த பயிற்சி ஆசிரியரான தோழர் மென்டிஸ் அவர்கள், இராணுவப் பயிற்சி அளிப்பதிலும், அரசியல் ரீதியில் இளைஞர்களை வளர்ப்பதிலும் அதீத அக்கறை காட்டி வந்தார்.Posted by plotenewseditor on 10 January 2025
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 10 January 2025
Posted in செய்திகள்
1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 51வது சிரார்த்ததினம் இன்றாகும். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.Posted by plotenewseditor on 10 January 2025
Posted in செய்திகள்
ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று(10) பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிரிஹானை பகுதியில் தமது அயலவர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உதயங்க வீரதுங்க இன்று(10) கைது செய்யப்பட்டார். Read more
Posted by plotenewseditor on 10 January 2025
Posted in செய்திகள்
பிக்கு மாணவர்கள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் அனைத்து பிக்கு மாணவர்களுக்கும் நாளை(11) நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 10 January 2025
Posted in செய்திகள்
வடக்கு பகுதியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள துறைமுகத்தைஇ இலங்கை முதலீட்டாளர் ஒருவருடன் இணைந்து அபிவிருத்தி செய்ய மாலைத்தீவு அதிகாரிகள் விருப்பத்துடன் உள்ளதாக இலங்கை ரூனெயளர் மாலைத்தீவு வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இலங்கை மாலைத்தீவு வர்த்தக சபையின் தலைவர் சுதேஷ் மெண்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 10 January 2025
Posted in செய்திகள்
இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பி.ஐ.பீ.ஏ எனப்படும் அந்த நாட்டு சனத்தொகை, குடிவரவு மற்றும் எல்லை தொடர்பான அதிகார சபையின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். Read more