கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
09.01.1991 ஆம் ஆண்டு மரணித்த தோழர் சிறி (கணேசன் சிறிகணேசபுனிதன் – யாழ்ப்பாணம்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
இலங்கையில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா ஏதிலிகளை நாடுகடத்த வேண்டாம் என வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ரோஹிங்கியா ஏதிலிகளை நாடு கடத்த வேண்டாம் எனவும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி டபிள்யு. ஜி. எம். ஹேமந்த குமார இன்று (09) மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். 2003.09.02 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட இவர் தெஹியத்தகண்டிய உதவி பிரதேச செயலாளர்,
இஸ்லாம் மதத்தை அவமதித்ததற்காக ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (9) நிராகரித்துள்ளார்.
இந்த வருடத்துக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் நாடாளுமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது. இதன்படி, இந்த வருடத்துக்கான அரச செலவீனம் 4 ஆயிரத்து 218 பில்லியன், 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபாவாகும். ஒதுக்கீட்டு சட்டமூலத்துக்கு அமைய, ஜனாதிபதி செயல்முறை திட்டத்தின் மீண்டுவரும் செலவீனம் 2 ஆயிரத்து 518 மில்லியன் ரூபாவாகும். அத்துடன் மூலதனச் செலவீனம் 354 மில்லியன் ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தனர். சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டார்.
வில்பத்து தேசியப் பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி வகை டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (7) மீட்கப்பட்டன. முள்ளிக்குளம் பாதுகாப்புத் தரப்பினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச் சென்ற வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் பரிசோதனை நடத்தினர்.
தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு மூன்று நாட்களுக்குள் கிடைக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. பதவி உயர்வு, வேதன அதிகரிப்பு மற்றும் சேவையை நிரந்தரமாக்கல் போன்ற கோரிக்கைக்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என அந்த கூட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அந்த கூட்டமைப்பு இன்று முற்பகல் கல்வி அமைச்சிற்குச் சென்றிருந்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதித்து கோட்டை பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என காவல்துறையினர் கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.