புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் முக்கிய கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்புக்கான ஏற்பாடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். Read more
நாட்டில் சமீப காலமாக சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஆஸ்துமா மற்றும் காசநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவாச நோய் நிபுணர் வைத்தியர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்த ஆண்டு இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயத்திற்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்துக்கான திகதியைத் தீர்மானிக்கும் பணிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
07.01.2015இல் மரணித்த தோழர் வசந்தன் (சுந்தரலிங்கம் வசந்தலிங்கம் – கோவில்புதுக்குளம்) – வவுனியா இலங்கை போக்குவரத்துக் கழக (CTB) முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்) அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று…
விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 ரோஹிங்கியா ஏதிலிகளும் இன்றைய தினம் (07) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்டனர். குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் குறித்த ஏதிலிகள் 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறையினரால் மீளப்பெறப்பட்ட நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டு ஏனைய ஏதிலிகளுடன் தங்க வைப்பதற்காக முல்லைத்தீவு இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
சீனாவுடன் தொடர்புடைய 5 யோசனைகளுக்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை அரசு ‘ஒரே சீனா’ கொள்கையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பது தொடர்பில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, சீன மக்கள் குடியரசை மாத்திரம் சட்டரீதியான சீனாவாக ஏற்றுக் கொள்வதற்கும் தாய்வான் சீனாவின் ஒரு மாநிலம் மாத்திரமே என ஏற்றுக் கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் இராஜதந்திர சேவைகளை முன்னெடுக்கும் வகையில் புதிதாக 5 இராஜதந்திரிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உத்தியோகப்பூர்வ நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கைதாகியுள்ளவர்களில் 100 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றில் 41 வழக்குகளும் உயர்நீதிமன்றில் 14 வழக்குகளும் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களைத் தாமதமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் வெளிவிவகார அமைச்சினால் டிஜிட்டல் வசதிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 தூதரகங்கள் ஊடாக இந்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
06.01.1985 இல் மன்னார் வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட பங்குத்தந்தை மேரி பஸ்ரியன் அடிகளார், ஜீவா, கட்சன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்களின் 40 ஆம் ஆண்டு நினைவுகள்….