Header image alt text

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிக் கடந்த 6 நாட்களாகக் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இதன்படி இன்று ஏழாவது நாளாக யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் எனச் சந்தேகிக்கப்படும் நோய் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி – முழங்காவில் மற்றும் கண்டாவளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓமானில் உயிரிழந்த இலங்கை யுவதியொருவரை தொழிலுக்காக அனுப்பிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை – சூச்சி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது. Read more

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more

சிறைச்சாலை அதிகாரி பதவிக்கு 1800 வெற்றிடங்கள் காணப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் சோதனை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கைதிகளைப் சோதனைக்குட்படுத்துவதற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திசாநாயக்க கூறினார். Read more

05.01.1996 ஆம் ஆண்டு வவுனியாவில் கொல்லப்பட்ட தோழர் அர்ச்சுணா (சிங்கராஜா நேசராஜா) அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

05.01.1988 ஆம் ஆண்டு கல்நாட்டினகுளத்தில் மரணித்த கழகத்தின் முன்னாள் தென்மராட்சி பொறுப்பாளர் தோழர் ரகு (கண்ணாடி ரகு – கொக்குவில்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

வவுனியா திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 34 பாடசாலைப் பிள்ளைகளுக்கு லண்டனில் வசிக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதியுதவியில் இன்று (05.01.2025) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), தோழர்கள் சந்திரன், ரூமி ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

Read more

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா – கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். Read more