Header image alt text

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞர், கார் கதவு திறக்கப்படாமையால் அதிக நேரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவமானது வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

கடற்றொழில் தொடர்பான புதிய சட்டம் கொண்டுவரப்படும்போது, ஐரோப்பிய நாடுகளுடனும் அது தொடர்பில் கலந்துரையாடப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்துடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more

இலங்கையில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள அதானி குழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்குக் குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக வலுசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த யோசனை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் மெட்டாவுக்கு சொந்தமான முன்னணி செயலியான வாட்ஸ்அப், கூகுள் மூலம் வாட்ஸ்அப் இணையப் பயனர்களுக்காக  reverse image search எனும் அம்சத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. reverse image search எனும் அம்சம், வாட்ஸ்அப் பயனர்கள் சந்தேகத்திற்குரிய புகைப்படத்தைச் சரிபார்ப்பதற்காக நேரடியாகக் கூகுளில் பதிவேற்றி சோதனை செய்ய அனுமதிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும். Read more

04.01.1990 இல் மரணித்த தோழர் தேவன் (கிருஸ்ணப்பிள்ளை செல்வராஜா – புங்குடுதீவு) அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

04.01.1985 ஆம் ஆண்டு மரணித்த தோழர் இ.ரவிசேகரன் (மாணவர் பேரவை) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.

இந்திய துணைத் தூதுவர் சிறி சாய் முரளிக்கும், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது, இந்திய அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த இருவரில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read more

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சுண்ணக்கல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வர்த்தக நிலையமொன்றின் வாகனமொன்று, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. Read more

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய் பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். Read more