அரசியல் நியமனம் பெற்ற 18 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைய வெளிநாட்டு சேவையை வினைத்திறன் மிக்க சேவையாக மாற்றும் நோக்கில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவரான மகிந்த சமரசிங்க அந்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் எனவும் அவர் கூறினார். Read more
இதுவரையில் கால தாமதம் ஆகியுள்ள 130,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு இன்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய புலனாய்வுப் பிரிவின் புதிய பிரதானியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய (ஓய்வு) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) இன்று (3) சந்தித்தார். கொழும்பில் உள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) நேற்று முன்தினம் (1) தமது புதிய நியமனத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித்த ராஜபக்ஷ 2 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறினார். கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம் (03) முன்னிலையாகுமாறு யோஷித்த ராஜபக்ஷவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்குஇ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இப்பதவியை முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார வகித்திருந்தார்.
02.01.1982 இல் மரணித்த புளொட் அமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும்,’புதிய பாதை’ ஆசிரியரும், கழகத்தின் முதலாவது தளபதியுமான தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி – சுழிபுரம்) அவர்களின் 43ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்றையதினம் (02) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. காத்மண்டு – பலுவட்டாரில் உள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, நேபாளம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பல் மாலி இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்துள்ளது. 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் குறித்த கப்பல் பிரவேசித்துள்ளது. நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி மல்லாவி நகரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் ஒன்று இன்று (02) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்பொன்றினால் குறித்த கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களால் முன்வைக்கப்படும் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளிப்பதற்காகத் தொழில் அமைச்சினால் விசேட வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 070 722 78 77 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தில் மக்களால் முன்வைக்கப்படும் கடிதங்கள் தொடர்பில், உடனடியாக பதில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.