Header image alt text

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவிடமிருந்து (ஓய்வு பெற்றவர்) நியமனக் கடிதத்தை இவர் நேற்று பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் வணிகசூரிய (ஓய்வு) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் அவரது அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

01.01.1990 ஆம் ஆண்டு முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் சாம் முருகேசு, உடுவெரகே ஹென்ரி பெரேரா, வை.திருச்செல்வம் (சந்திரன்), சக்திவேல், கார்லோஸ், சந்தனம், ரவீந்திரன், கரிகாலன், சைமன், (பஞ்சாபி), கங்கா, தவம், பெரியதம்பி, சதீஸ், பிள்ளை, தயாளன், பரட்டைவிமல்(சண்முகம் விமல்),.. டொக்டர், சுரேஷ், ரமேஸ் (ரமேஸ்வரன்), நேசன் (செல்லத்துரை லோகநாதன்), ரவி (சுந்தர்ராஜ் ரவி) உள்ளிட்ட தோழர்களினதும், இதனைத் தொடர்ந்து மரணித்த காந்தீயம் அமைப்பில் செயற்பட்ட திருமதி ராமசந்திரன் ராசம்மா அவர்களினதும் 35ம் ஆண்டு நினைவுகள்!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான நாமல் குமார விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவில் இன்று முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சைபர் தாக்குதல் காரணமாக தற்காலிகமாக செயலிழந்திருந்த அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார். Read more

கிளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டம் இன்று முற்பகல் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான மக்கள் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமுனி கமந்த துஷாரவினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. Read more

தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.