ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இந்து பசிபிக் பிராந்தியத்திற்கான வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் நிர்வாக மேம்பாட்டு அலுவலக அமைச்சரான கேத்தரின் வெஸ்ட்(Catherine West), பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வறுமை ஒழிப்பு, பிராந்திய அபிவிருத்தி மற்றும் பொருளாதார சமநிலை உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதான முன்னுரிமை திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. Read more
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்ய வேண்டுமாயின் 90 நாட்களுக்குள் உரிய கொள்வனவாளரின் பெயரில் மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வாகன இறக்குமதி தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று(27) பிற்பகல் இந்த வர்த்தமானியை வௌியிட்டிருந்தார்.
20.01.2025 திங்கட்கிழமை கனடா மொன்றியலில் காலமான தோழர் மணியம் (மாசிலாமணி சின்னையா – பொன்னம்பலம்) Founder – Auto Plus Nirmala) அவர்களின் அஞ்சலி நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கனடா கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு மலர் வளையமிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
இலங்கை விமானப்படையின் 20ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம்(29) முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரவுள்ளது. விமானப்படையின் தற்போதைய தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸ எதிர்வரும் 29ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியாகப் பேராசிரியர் ரகுராம் மீளவும் நியமிக்கப்படும்வரை சாத்வீக ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மனோகரன் சோமபாலன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மூடிமறைக்கப்பட்ட அனைத்து குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான பாதீடு அடுத்த மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எதிர்வரும் பாதீட்டில் அரச பணியாளர்களுக்கு வேதன மற்றும் இதர நலன்புரி கொடுப்பனவுகள் அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிப்படும்.
எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தயாராகியுள்ளது. சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக நினைவுகூர்ந்து போராட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவுகள் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
யோஷித ராஜபக்ஸ கொழும்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான யோஷித ராஜபக்ஸ இன்று(27) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது 500 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில் பெலியத்தையில் வைத்து நேற்று முன்தினம்(25) யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டார்.
2017.01.26இல் மரணித்த தோழர் பாபு (ராமசாமி காளிமுத்து – தம்பனைச்சோலை) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுநாள் இன்று…
மட்டக்களப்பு உன்னிச்சையை சேர்ந்த தோழர் சுமன் (புவனேஸ்வரன்) அவர்களின் புதல்வன் நேற்று அகால மரணமடைந்துள்ளார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருவதோடு, அன்னாரின் புரிவுத் துயரில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் பங்கு கொள்கிறோம்