யாழ் ஆவரங்கால் பகுதியில் நேற்று (22.01.2025) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த உதயநாதன் விதுசன் (வயது 32) சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், ஆவரங்கால் பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக கூட்டிச் சென்ற குறித்த இளைஞன் மீது மோதியே விபத்து இடம்பெற்றது. Read more
		    
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
22.01.2017 ஆம் ஆண்டு மரணித்த தோழர் கண்ணன் ( தர்மரட்ணம் ஜூட் புஷ்பசீலன்- சண்டிலிப்பாய்) அவர்களின் 08ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
22.01.2006 ஆம் ஆண்டு கணேசபுரத்தில் மரணித்த தோழர் தம்பி (தர்மகுலசிங்கம் – வவுனியா) அவர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
அமைச்சர்களுக்கு அதிசொகுசு உத்தியோகப்பூர்வ இல்லங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வாறான 30 இல்லங்கள் தொடர்பில் தற்போது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். 
அனுராதபுரம் போக்குவரத்து காவல்துறையின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்தேகநபராக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்ஜீவ ஜயசூரிய நிராகரித்துள்ளார். சந்தேநபரின் பெயரை அர்ச்சுனா லோச்சன என பி அறிக்கையில் காவல்துறை குறிப்பிட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். 
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில்  ஜனாதிபதி  அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் செல்வம் அடைக்கலநாதனுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். பொதுமக்களுக்குக் கூடுதல் நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். 
இராணுவ முகாமொன்றில் காணாமல் போயிருந்த T56 ரக 73 துப்பாக்கிகளில் 38 துப்பாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மேலதிக சோதனைகளுக்காக அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறினர்.  காணாமல் போனதாகக் கூறப்படும் ஏனைய துப்பாக்கிகளைத் தேடும் பொருட்டு விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.