அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம், கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு உலக வங்கியிடமிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க இதன்போது உடன்பாடு வெளியிடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more
யாழ் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது. அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இராமநாதன் அர்ச்சுனா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கடந்த வாரம் சென்னைக்கு சென்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான் தடுத்து நிறுத்தப்பட்டமைக்கு, கனடாவில் இருந்து இயங்கும் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றுடன் கலந்துரையாடுவதற்காக சென்றமை தான் காரணம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என் மீது போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன. இது தொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர். இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்ற யோசனை ஐக்கிய தேசிய கட்சியால் முன்வைக்கப்பட்டது. இதனை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்தது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமட்டா அக்கியோ திருகோணமலை -மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதிக்கு நேற்று (20) விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட சம்பூர் – பெரிய குளத்தை அவர் இதன்போது பார்வையிட்டார்.
வடமாகாண தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றிலில் ஒன்று கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தொடருந்து திணைக்களத்தினால் இணையதளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தொடருந்து திணைக்களம் அளித்த முறைபாட்டை தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சேருநுவர – கல்லாறு இராணுவ முகாமை அண்மித்து இன்று(20) அதிகாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் விபத்துக்குள்ளான போது பயணிகள் 49 பேர் இருந்துள்ளனர்.
சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அவர் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.