Header image alt text

அயல்வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று(17) பிணையில் விடுவிக்கப்பட்டார். நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர் 10,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டார்.

சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி இன்றிரவு(17) நாடு திரும்பியுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, சீன ஜனாதிபதி, சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் Wang Xiaohui உள்ளிட்டவர்களை சந்தித்திருந்தார். சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க இந்த விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் பலர் தங்கியிருந்த அறுகம்பை சுற்றுலாத் தலத்தை இலக்கு வைத்து, சிறைச்சாலைக்குள் இருந்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக பயங்கரவாத புலனாய்வுப்பிரிவு இன்று(17) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அது தொடர்பிலான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ​போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. Read more

பின்லாந்தில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திசர நாணாயக்காரவிற்கு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று(17) பிணை வழங்கியுள்ளது. இன்று முற்பகல் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் சகோதரரான திசர நாணாயக்கார கடந்த 28ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். Read more

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் 2 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன்று(16) கைச்சாத்திடப்பட்டுள்ளன. மலையகப் பகுதிகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு 60 Smart வகுப்பறைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயஸ்ர்தானிகர் சந்தோஷ் ஜா பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். Read more

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், நீண்ட காலமாக மன்னாரில் இடம்பெற்று வரும் கொலை சம்பவங்களின் தொடர்ச்சியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாட்டுவண்டி போட்டி தொடர்பில் மன்னாரில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே நிலவும் முறுகல் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்தனர். Read more

மன்னார் நீதவான் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் இன்று(16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று(16) காலை 9.20 அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்றாகும். ஜனாதிபதி சீனாவின் அரச, தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலீட்டு அமர்வில் இன்று(16) முற்பகல் கலந்து கொண்டார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த அமர்வு இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc), Read more

சின்னடம்பனைப் பிறப்பிடமாகவும், அனந்தர்புளியங்குளத்தை வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் அம்மான் (சிவாஜிகணேசன்) அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. தம்பையா கந்தையா அவர்கள் (15.01.2025) காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

Read more

யாழ்ப்பாணம் – வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் இன்று(15) அதிகாலையில் வீடு வடிவிலான மிதவையொன்று கரையொதுங்கியுள்ளது. இதனை பார்வையிடுவதற்காக அதிகளவிலானவர்கள் நாகர்கோவில் கரையோரப் பகுதிக்கு சென்றிருந்தனர். தாய்லாந்து, மியன்மார் அல்லது இந்தியாவில் இருந்து இந்த மிதவை வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். Read more