Header image alt text

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நாளைய தினம் நடைபெறும். அதன்படி நாளை காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான PNS ASLAT  எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படையின் மரபுகளுக்கு அமைய கடற்படையினர் குறித்த கப்பலை வரவேற்றதாக கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டளைத் தளபதி முஹமது அசார் அக்ரம் தலைமையில் இந்த கப்பல் வருகை தந்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தக் கப்பல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் பதவிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகரவால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநரின் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. Read more

பெருந்தோட்ட மக்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 5,400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். Read more