பெருந்தோட்ட மக்களுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 5,400 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். ஹட்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டங்களை இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
இதன்படி, இந்த ஆண்டுக்குள் 4,700 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.