பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான PNS ASLAT எனும் கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. இலங்கை கடற்படையின் மரபுகளுக்கு அமைய கடற்படையினர் குறித்த கப்பலை வரவேற்றதாக கடற்படை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டளைத் தளபதி முஹமது அசார் அக்ரம் தலைமையில் இந்த கப்பல் வருகை தந்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி இந்தக் கப்பல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது.