Header image alt text

03.02.1985இல் சென்னையில் மரணித்த தோழர் குஞ்சி (பிரான்ஸிஸ் – புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் 40ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளை ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டங்களில் ஈடுபட இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எழுவருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. Read more

மன்னார் நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 16ஆம் திகதி மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்திருந்தனர். Read more

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதிய தலைவராகச் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். குறித்த மன்றத்தின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றிய அவர்இ சோசலிச இளைஞர் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றுகின்றார். Read more

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை(4) 285 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விசேட அரச பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆறு பெண் கைதிகள் உட்பட 285 பேர் விடுதலைச் செய்யப்படவுள்ளனர். Read more

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். Read more

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு புதிய தலைமை சூத்திரதாரியை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்தார். Read more

323 இறக்குமதி கொள்கலன்களை சுங்கப் பரிசோதனையின்றி விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழு​வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் பிரதி செயலாளர் A.K.செனவிரத்ன தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. Read more