Header image alt text

சமூக மேம்பாட்டுக் கழகத்தின் இரண்டாவது செயற்குழுக் கூட்டம் 03.02.2025 அன்று, அதன் தலைவர் த. சித்தார்த்தன், செயலாளர் ந. இராகவன், பொருளாளர் த. கதிர்காமநாதன் ஆகியோர் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
கடந்த செயற்குழுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கிணங்க, அமைப்பிற்கான வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நிதிப் பரிவர்த்தனைகளை அக் கணக்கின் ஊடாக மட்டும் முன்னெடுப்பதுடன் கணக்கின் விபரங்களை அமைப்பின் அங்கத்தினர்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஆதரவாளர்களுக்கு அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டது.

Read more

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில்ரூnடிளி;முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது . Read more

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்யாது என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 24 மணி நேரமும் இயங்கி, நாளொன்றுக்கு 4,000 கடவுச்சீட்டுக்களை வழங்குவதை உறுதி செய்வதற்காகக் கூடுதல் ஊழியர்களை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடவுச்சீட்டுப் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள புத்திஜீவிகள் குழுவின் விதந்துரைக்கமைய ‘பி’ வகைக் கடவுச்சீட்டுக்கள் 1,100,000 இனை சமகால விநியோகத்தர்களுக்கு வழங்குவதற்கான பெறுகை செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி ஆவார். Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறித்த உத்தரவினூடாக பாலஸ்தீன ஏதிலிகளுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவரும் ஐக்கிய நாடுகளின் முகவரகத்துக்கு தொடர்ந்தும் அமெரிக்காவினால் நிதியுதவி வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.