2022 ஆம் ஆண்டு தமது இல்லங்கள் சேதமடைந்ததாக தெரிவித்து நட்டஈடு பெற்றுக்கொண்ட 43 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்பட்டியல் மற்றும் அவர்கள் பெற்றுக்கொண்ட தொகை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆளும் கட்சி பிரதம கொறடா அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் இவை குறித்து சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more
புதிதாக நியமிக்கப்பட்ட முப்படை தளபதிகள் இன்று (06) பிற்பகல் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை, ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் திகதி அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவியின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தையிட்டி விகாரையை இடித்து அகற்றாமல் அந்த காணியின் உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துக்கு, வட மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்இ தையிட்டி விகாரை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.