தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாம் வகுப்பு தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. தொடருந்து பொது முகாமையாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த வசதி மீண்டும் செயல்படுத்தப்படுவதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு செல்லும் இரண்டு தொடருந்துகளிலும்,  தலைமன்னார் நோக்கிச் செல்லும் ஒரு தொடருந்திலும் மூன்றாம் வகுப்பு தொடருந்து இருக்கைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அதிக பயணிகள் ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகத் தொடருந்து பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர நேற்று தெரிவித்திருந்தார்.