பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உள்ளிட்ட 06 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை நிறைவேற்றுவதற்காக பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டி.ஜி.எஸ்.டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபராக செயற்பட்டார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.கே. ஜயலத் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னதாக வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக செயற்பட்டார்.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக செயற்பட்ட கே. அஜித் ரோஹண வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக எஸ்.டபிள்யூ.எம். சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இதற்கு முன்னதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக செயற்பட்டார்.

ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக செயற்பட்ட யூ.பீ.ஏ.டீ.கே.பீ. கருணாநாயக்க விசேட பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா மற்றும் மன்னார் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபராகக் கடமையாற்றும் எஸ்.டீ விஜேசேகர அந்த கடமைகளுக்கு மேலதிகமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிராந்தியங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபராகவும் செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.