மூத்த பத்திரிக்கையாளர் இராஜநாயகம் பாரதி தனது 63ஆவது வயதில் இன்று காலமானார். ஞாயிறு தினக்குரல், தினக்குரல் ஒன்லைன் ஆகியவற்றின் முன்னாள் பிரதம ஆசிரியரும் வீரகேசரி வடபிராந்திய பதிப்பின் ஆசிரியருமான மூத்த பத்திரிகையாளர் இராஜநாயகம் பாரதி இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். Read more
வவுனியா நாலாம்கட்டை விசேட தேவைக்குட்பட்டோருக்கான புனர்வாழ்வு அமைப்பான வரோட் நிறுவனத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இன்று (09.02.2025) ஞாயிற்றுக்கிழமை விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. சுவிஸ் சூறிச்சில் வசிக்கும் திரு. திருமதி. பார்த்தீபன் தம்பதியினரின் செல்வப்புதல்வர்களான பார்த்தீபன் ஆதிசன், பார்த்தீபன் ஆகிசன் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கழகத்தின் வவுனியா மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு துறைமுகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இரண்டு இளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பது சிறப்பு எனத் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார். இந்தப் புதைகுழி வழக்கமான புதைகுழி அல்ல என்றும், உடல்கள் புதைக்கப்பட்ட விதம் அவை கொலை செய்யப்பட்டிருப்பதைக் குறிக்கிறது என்றும் பேராசிரியர் கூறினார்.
கல்கிசை காவல்துறையில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், மூத்த காவல்துறை அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த காவல்துறை உத்தியோகத்தர் தனது கடமையிலிருந்த T-56 துப்பாக்கியை மூன்றாம் தரப்பினரிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டதாகத் தெரியவந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர் உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு சீனத்தூரகத்தின் பிரதி பிரதானி தலைமையில் வவுனியா மாவட்ட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.