தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தவரும், வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அதன் யாழ். காரியாலய பொறுப்பு அதிகாரியுமான மூத்த தமிழ் ஊடகவியலாளர், பாரதி இராஜநாயகம் (பாரதி) அவர்கள் தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலைத் தெரிப்பதோடு, அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.