நிதித் தூய்தாக்கல் தடைச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஸவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை கூறினார். Read more
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியத்தை நேற்று சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருமானத்தை திறம்பட நிர்வகித்தல், பொதுத்துறையின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார காரணிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை – பெனடிக் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணைகளில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 4 குழுக்கள் ஈடுப்படுத்தக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘பூகுடு கண்ணா’ எனப்படும் போதைபொருள் கடத்தல்காரரின் உதவியாளர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரசாங்கத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்ற வலியுறுத்திப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இன்று முதல் அங்குப் பாரிய போராட்டம் ஒன்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.