கொட்டாஞ்சேனை – பெனடிக் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான விசாரணைகளில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 4 குழுக்கள் ஈடுப்படுத்தக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தில் ‘பூகுடு கண்ணா’ எனப்படும் போதைபொருள் கடத்தல்காரரின் உதவியாளர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
குடு செல்வி எனும் பெண்ணின் தரப்பினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க குறிப்பிட்டார்.
முச்சக்கர வண்டியொன்றுக்கு அருகில் நின்றிருந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
43 வயதான குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.