பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியத்தை நேற்று சந்தித்தார். பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இலங்கையின் வரிக் கொள்கை, வரி வருமானத்தை திறம்பட நிர்வகித்தல், பொதுத்துறையின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பொருளாதார காரணிகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், நிலையான வளர்ச்சியை நோக்காகக் கொண்ட கொள்கை ரீதியான காரணிகள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.