தாமரை கோபுர திட்டத்தில் பொறியாளராகப் பணியாற்றிய சீன நாட்டவர் ஒருவர் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 318,000 மில்லிலீட்டர் கோடா, 67,500 மில்லிலீட்டர் சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன. Read more
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவை நேற்று (11)சந்தித்தார். இந்த சந்திப்பானது நீதியமைச்சில் நடைபெற்றது. இதன்படி, இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், 26 ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட கடற்படைத் தளபதிக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தகம் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தமக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் நபர் முறைப்பாடளித்துள்ளாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவுக்கும் இந்திய பாதுகாப்பு செயலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் சிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பெங்களூரூவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா 2025 விமான கண்காட்சியின் ஓர் அங்கமாக நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.