Header image alt text

மலர்வு : 1969.09.30 உதிர்வு : 2025.02.11
வவுனியா கோயில்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரகு வதனா அவர்கள் 2025.02.11 செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.

Read more

சட்ட மா அதிபரை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்னெடுக்கப்படும் எந்தவொரு செயற்பாட்டுக்கு எதிராகவும், சட்ட மா அதிபரைப் பாதுகாப்பதற்காகவும் முன்னிற்பதாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சட்ட மா அதிபர் தொடர்பில் கடந்த நாட்களில் வெளியிடப்படும் தவறான கருத்துக்கள் தொடர்பில் தங்களது சங்கம் கவலையடைவதாகவும் அந்த சங்கத்தின் பதில் செயலாளர் டஸ்யா கஜநாயக்க தெரிவித்துள்ளார். Read more

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சட்டமா அதிபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இனி சட்ட நடவடிக்கை தேவையில்லை என்றும்இ எனவே அவர்களை விடுவிக்க முடியும் என்றும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு எழுத்து மூலமாகத் தெரிவித்திருந்தார். Read more

மன்னார் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த 1 பில்லியன் டொலர் பெறுமதியான புதுப்பிக்கத்தக்கக் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தின் வேலைத்திட்டத்தை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதானி நிறுவனத்தின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபைக்குக் கடிதம் ஒன்று அனுப்பிவைத்துள்ளார். Read more

பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. உலக அரச உச்சி மாநாட்டையொட்டி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மேற்கொண்டிருந்த மூன்று நாள் விஜயத்துடன் இணைந்ததாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. Read more

இந்தியாவின் சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை மேலும் அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ தீர்மானித்துள்ளது. இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களுக்காக விசேட மொழிபெயர்ப்பாளர் குழுவை உருவாக்க தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. அரச நிறுவனங்களில் சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் முனீர் முலாபர் தெரிவித்தார். அதனடிப்படையில் அரச சேவையில் பல்வேறு மொழித்திறன் கொண்ட தொழில் வல்லுநர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.