Header image alt text

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றங்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, இந்தியாவில் தலைமறைவாகியுள்ள, குற்றவாளிகளை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். Read more

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுர பி.மெத்தேகொடவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். கடந்த காலங்களில் கவனத்தை ஈர்த்துள்ள பல குற்றவியல் விசாரணைகள் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுர பி. மெத்தேகொடவுக்கு அஹிம்சா விக்ரமதுங்க எழுதிய கடிதத்தில் சட்டமா அதிபர் அலுவலகம் முறையாக நீதி வழங்கத் தவறியதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இரண்டு வழிகளில் பதிலளித்துள்ளதாகக் கூறியுள்ளார். Read more

சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவில் கண்டறிவதற்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவிக்கின்றது. சுற்றாடலை பாதுகாப்பதற்காக பொதுமக்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த வட்ஸ்அப் இலக்கம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more

அம்பாறை மாவட்டத்தில் தொழில் கோரும் பட்டதாரிகளினால் தமக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருமாரு கோரி இன்றைய தினம் (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை – காரைத்தீவு சந்திக்கு அருகில் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுவரை தங்களது கோரிக்கைகளுக்கான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். Read more

மிக நேர்மையான ஊடகவியலாளரான பாரதி, அரசியல் ரீதியில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களுடனும் ஒரேவிதமாகப் பழகி, அவர்களது கருத்துக்களை செவிமடுக்கக்கூடிய பண்பைக் கொண்டிருந்தார். அரசியல் ரீதியில் எவ்வித காழ்ப்புணர்ச்சியுமின்றி, எதற்கும் அஞ்சாமல், எதையும் துணிந்து எழுதக்கூடிய ஊடகவியலாளரை இப்போது வழியனுப்பி வைக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம் என்றார்.

பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததார். இதன்போது, பிரதமர் கல்லூரியின் அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. கல்லூரி அருங்காட்சியகம், மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பிரதமர் பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.