அம்பாறை மாவட்டத்தில் தொழில் கோரும் பட்டதாரிகளினால் தமக்கான தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருமாரு கோரி இன்றைய தினம் (15) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை – காரைத்தீவு சந்திக்கு அருகில் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதுவரை தங்களது கோரிக்கைகளுக்கான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொழில் கோரும் பட்டதாரிகளால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.