Header image alt text

16.02.2007 இல் வவுனியா திருநாவற்குளத்தில் மரணித்த தோழர் கோன் (செல்லர் இராசதுரை- வவுனிக்குளம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவுகள்…

16.02.1986 இல் வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தில் மரணித்த தோழர் நியாஸ் (செ.அம்பிகைபாகன்- நொச்சிமோட்டை), மாயக்கண்ணன் ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவுகள்…

யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு காணிகள் தொடர்பாகக் காணி உரிமையாளர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்பியதால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் தொகுதி மக்கள் சந்திப்பு ஏழாலை ஏழு கோவிலடியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று மாலை மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. Read more

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் பதில் தலைவர் C.V.K.சிவஞானம் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெற்ற போதே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இராணுவ ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இராணுவ வீரர்களின் அமைதி காக்கும் கடமைகள் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சியை விரைவுபடுத்துவதற்கான திட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரதமர் ஹரினி அமரசூரிய இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, அங்கு அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, பிற்பகல் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச பொது அமைப்புகள் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இதன்போது, விவசாயிகளும் நுகர்வோரும் பாதிக்காத வகையில் நெல்லுக்கான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். Read more

8ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் போது, ​​ இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். மேலும், கடல்சார் கூட்டாண்மை மாநாட்டிற்காக தற்போது ஓமானுக்கு செற்றுள்ள விக்ரமசிங்க, கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பரஸ்பர கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி  புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை  மேற்கொள்ளவுள்ளனர்.  இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more