Header image alt text

உள்ளூராட்சி மன்றரூnடிளி;தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 187 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எதிராக ஒரு வாக்கேனும் கிடைக்கப்படவில்லை.

மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை போன்றதொரு அவல நிலை ஏற்படுவதற்கு வழிவகுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையை உடைப்பது வெறுமனே பிரச்சினைகளை உண்டாக்கும் எனவும் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். Read more

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் கலாசூரி கலாநிதி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் தனது 79 ஆவது வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானார். 1946 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர், இலங்கையின் கலை, கலாசாரம் மற்றும் ஒலிபரப்பு துறைக்கு பாரிய பங்காற்றியுள்ளார். அத்துடன், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தேசிய சேவையின் தமிழ் பிரிவின் பணிப்பாளராகவும் அவர் கடமையாற்றியிருந்தார். Read more

தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இன்று(17) முற்பகல் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த யோசனைகள் பின்வருமாறு :

⭕ இந்த வருடம் 5 வீத பொருளாதார வளர்ச்சியை அடைவதே எதிர்பார்ப்பு Read more