Header image alt text

மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (க.உமாமகேஸ்வரன்) அவர்களின் 80ஆவது பிறந்தநாள் இன்றாகும்…
18.02.1945 – 16.07.1989

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதி செயலதிபர் அமரர் தோழர் முகுந்தன் (க.உமாமகேஸ்வரன்) அவர்களின் 80ஆவது பிறந்தநாள் தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் வவுனியா மணிக்கூட்டு கோபுரம் சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு வவுனியா தோழர்களால் மாலை மற்றும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் கோவில்குளத்தில் அமைந்துள்ள நினைவில்லத்திலும் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. Read more

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை தலைமையதிகாரிகளுக்கு இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. அரச வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வரிசையில் காத்திருப்பதால், அந்த வரிசைகளைக் குறைக்க ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஆராயப்பட்டது. Read more

மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. Read more