மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா கலீல் இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.