19.02.2016இல் மரணித்த யாழ். நெடுந்தீவை பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இளைஞர் பேரவையிலும், அதன் பின்னர் காந்தீயம் அமைப்பிலும் தம்மை இணைத்துக்கொண்டு மக்கள் பணியினை ஆரம்பித்த இவர் அதன் பின்னர் கழகத்தின் அரசியல் பிரிவில் அதன் ஆரம்ப காலம் தொட்டு தீவிர செயற்பாட்டாளராக தொடர்ச்சியாக இயங்கி வந்தார்.
23 அரச நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் மன்னாரில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து குறித்த செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.
புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கனேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. சட்டத்தரணியின் சீருடையில் பிரவேசித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தித் தப்பிச்சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ இன்று(19) முற்பகல் வழக்கொன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு சாட்சிக்கூண்டில் நிறுத்தப்பட்ட போதே சுட்டுக்கொல்லப்பட்டார். சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வருடாந்த இடமாற்றப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் மேல் மாகாணசபைக்கு உட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் நிர்வாகக்குழு நேற்று கூடி இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசியம் சார்ந்த சகல கட்சிகளையும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த வைப்பதற்கான முயற்சியை இலங்கை தமிழரசுக் கட்சி முன்னெடுத்துள்ளதாக அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.