23 அரச நிறுவனங்களின் பங்குபற்றுதலுடன் மன்னாரில் இன்று முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே, இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பொது மக்களின் எதிர்ப்பை அடுத்து குறித்த செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன.
அவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு 10 பேருக்குத் தடை விதித்து மன்னார் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக மக்கள் பாதிப்படைவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் எடுத்துரைக்கப்பட்டன.
இந்தநிலையில், காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கு கனிய மணல் ஆய்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த போதிலும், நாடாளுமன்றில் இருந்து கிடைக்கப்பட்ட அறிவுறுத்தல் ஒன்றுக்கு அமைய, அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.