கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். குறித்த பெண் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு பணப்பரிசில் வழங்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. Read more
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று(19) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கணேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்தார்.
மட்டக்களப்பு மார்க்கத்தின் கல்ஓயா – மின்னேரியா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளான 6 யானைகளும் உயிரிழந்துள்ளன. 8 யானைகள் நேற்றிரவு(19) ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த மீனகயா கடுகதி ரயிலிலே இவ்வாறு யானைகள் மோதி விபத்து நேர்ந்துள்ளது.