Header image alt text

வவுனியா இறம்பைக்குளத்தில் 21.02.2002இல் மரணித்த தோழர்கள் வாசன் (இராஜரட்ணம் ஜெயச்சந்திரன் – யாழ்ப்பாணம்), சத்தியா (கைலாசப்பிள்ளை செந்தமிழ்செல்வன்) ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…..

வவுனியா நொச்சிமோட்டையில் 21.02.1992இல் மரணித்த தோழர்கள் நிதி (இராசையா மோகன் – பாலையடிவட்டை), அகிலன் (அந்தோனி இராஜேந்திரன் – மட்டக்களப்பு) ஆகியோரது 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

பொருளாதார நெருக்கடியிலிருந்து மாலைதீவை மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் (Abdulla Khaleel) இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(20) சந்தித்த போதே இதனை கூறியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டது. Read more

மித்தெனியவில் மீகஸ்ஆரே கஜ்ஜா என அழைக்கப்படும் அருண விதானகமகேவும் அவரது இரு பிள்ளைகளும் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பொலிஸ் அதிகாரியென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் இன்று(21) தெரிவித்தார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூவரினதும் சடலங்கள், மித்தெனிய குடகல்ஆர பகுதியிலுள்ள அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதுடன் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெறவுள்ளன. Read more

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியை எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சாரதியை விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. Read more

புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியொன்றின் விலை அதிகரித்துள்ளது. புதிதாக கொள்வனவு செய்யப்படும் முச்சக்கரவண்டியின் விலை 1,995,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிட்டட் நிறுவனம் தனது இணையத்தள பக்கத்தில் புதிய விலையைக் காட்சிப்படுத்தியுள்ளது. டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியிடம் தற்போது புதிய வாகனங்கள் இல்லாத போதிலும் முன்பதிவு செய்வதற்காக சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.