Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக கிளிநொச்சி ஜெயந்திநகர், மகாதேவா சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று விசேட மதிய உணவு வழங்கிவைக்கப்பட்டது.

Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக இன்று வவுனியா கோயில்குளம் உமாமகேஸ்வரன் நினைவில்ல வளாகத்தில் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு குளிர்பானம் வழங்கிவைக்கப்பட்டது.

Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக இன்று யாழ்ப்பாணம் அரசரடி, கந்தர்மடம் பகுதியில் உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

Read more

அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்கள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA) யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று…

Read more

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்காகச் சட்ட நிபுணர் ரின்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாதீடு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஒலிபரப்பில் ஒரு முன்னோடியாக விளங்கிய திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் நேற்று காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிபிசி தமிழோசையில் மூத்த தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார். அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கான தலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும். Read more

டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வற் வரியைச் செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகப் பொதுமக்களுக்குத் துரித தொலைபேசி இலக்கமொன்றை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

தமிழகத்தின் நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன்துறைக்கு முன்னெடுக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more