ஜனாதிபதி ஊடக ஆலோசகராக ஊடகவியலாளர் சந்தன சூரிய பண்டார நியமிக்கப்பட்டுள்ளதோடு ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபு ஆரச்சியும் நியமிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 24 February 2025
Posted in செய்திகள்

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம் எனவும், இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். Read more
Posted by plotenewseditor on 24 February 2025
Posted in செய்திகள்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் பெண்ணின் மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இஷாரா செவ்வந்தி எனப்படும் குறித்த பெண் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்ற தகவல் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த பெண் மத்துகம பகுதியில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இரவு சிறப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 24 February 2025
Posted in செய்திகள்
முப்படையில் இருந்து தப்பிச்சென்றுள்ள அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முன்னறிவிப்பின்றி முப்படையில் இருந்து தப்பிச்சென்றுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு முப்படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 24 February 2025
Posted in செய்திகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். Read more
Posted by plotenewseditor on 24 February 2025
Posted in செய்திகள்
கொட்டாஞ்சேனை கல்பொத்த சந்தி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்திற்குத் துப்பாக்கியை வழங்கிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கொலை சம்பவம் டுபாயிலிருந்து திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.